துபாயிலிருந்து இன்று சென்னை சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் -ன் சிறப்பு விமானத்தில் பயணித்த, கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் (28) ஒருவர் 1.34 கிலோ தங்கத்தை உள்ளாடைக்குள் வைத்து கடத்திச் சென்றிருக்கிறார்.
சுங்கவரி செலுத்தவேண்டிய பொருட்கள் தன்னிடம் ஏதுமில்லை என அப்பெண் தெரிவித்தாலும், ஸ்கேன் செய்யும்போது அதிகாரிகள் சந்தேகமடைந்திருக்கிறார்கள்.

உடனடியாக அவரை முழுமையாக பரிசோதித்த அதிகாரிகள் அவருடைய உள்ளாடைக்குள் 1.34 கிலோ தங்க பேஸ்ட் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இந்த தங்கத்தின் மதிப்பு 65 லட்சம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இளம்பெண் கைது செய்யப்பட்டு அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இளம்பெண்ணை பிடித்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
