UAE Tamil Web

ஷார்ஜாவில் 12வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த பெண்

ஷார்ஜாவில் குடியிருப்பு கட்டிடத்தின் 12வது மாடியிலலிருந்து 41 வயது பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்ததாக ஷார்ஜா போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஷார்ஜாவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் திங்கள்கிழமை நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடந்ததாக ஷார்ஜா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள், தவறி கீழே விழுந்த பெண் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேந்தவர் என்றும் , அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து புஹைரா காவல் நிலையம் விசாரனை நடத்தி வருகிறது. அது மட்டுமின்றி ஷார்ஜா வழக்கறிஞர்கள் பெண்ணின் உடலை தடயவியல் ஆய்வகத்தில் ஆய்வு செய்ய உத்தரவிட்டதை அடுத்து, உடல் பிரேத பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் முதற்கட்ட விசாரணையில் பெண் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

2 Shares
Share via
Copy link