UAE Tamil Web

வீடியோ: துபாய் போலீசை மக்கள் விரும்ப காரணம் இதுதான் – சாலையில் தவித்த பெண்ணிற்காக இறங்கிவந்த போலீஸ் அதிகாரிகள்..!

police dubai

மவுத் சொலேனே (Maud Solene) என்னும் பெண்மணி நேற்று வீட்டிலிருந்து கிளம்பும்போது கார் பஞ்சராகும் என நினைத்திருக்க வாய்ப்பில்லை தான். அல் அய்ன் சாலையில் வந்துகொண்டிருக்கும் போது சாலையிலேயே கார் பஞ்சராகி படுத்துவிட்டது. துணைக்குக் கூட யாருமில்லை.

பிசியான சாலைவேறு. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த அவர், காவல்துறை வாகனம் தன்னைப்பார்த்து வருவதைக் கண்டிருக்கிறார். என்ன சொல்லப்போகிறார்களோ என்னும் அச்சம் ஒருபுறம்.

காரை விட்டு கீழே இறங்கிவந்த காவல்துறை அதிகாரிகள், என்ன ஆயிற்று எனக் கேட்க, நடந்தவற்றை சொல்லியிருக்கிறார் மவுத். நீங்கள் ஓரமாக நில்லுங்கள் எனச் சொல்லிய அதிகாரி உடனேயே மவுத் – ன் பஞ்சரான கார் சக்கரங்களை கழற்ற ஆரம்பித்திருக்கிறார்.

புதிய சக்கரத்தை மாற்றிக்கொடுத்து, பத்திரமாக செல்லுங்கள் என அந்த அதிகாரி சொல்லும்போது மவுத் -ற்கு எப்படி அவர்களுக்கு நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.

இது நிச்சயமாக காவல்துறை அதிகாரிகளின் பணியல்ல. இருப்பினும் மக்கள் துயர் துடைக்க உழைப்பது என்னும் ஒற்றை வரியே துபாய் காவல்துறையின் இந்த செயலுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. துபாய் காவல்துறையை மக்கள் ஏன் நேசிக்கிறார்கள் என்பதற்கான காரணமும் இதுதான்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

police dubai
3 Shares
Share via
Copy link