UAE Tamil Web

துபாய் EXPO-வின் இறுதி நாளில் 24 மணிநேர மெட்ரோ சேவை

துபாய் EXPO 2020-வின் இறுதி நாளானா நாளை பார்வையாளர்களின் கூட்டத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக துபாய் மெட்ரோ 24 மணிநேரம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

EXPO 2020 துபாயின் தலைமை நிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்கு அதிகாரி கூறுகையில், “மார்ச் 31 ஆம் தேதி EXPO-வின் இறுதி நாளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மெட்ரோ ரயில்கள் இரவு முழுவதும் இயங்கும்” என்றார்.

துபாய் EXPO இறுதி நாளில் வானவேடிக்கைகள், விமான சாகச நிகழ்ச்சிகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த கலைஞர்களுடன் முழுமையான கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இறுதி நாளில் அதிகாலை 3 மணி முதல் வானவேடிக்கைகளுடன் கொண்டாட்டங்கள் தொடங்கப்படும்.

EXPO தளத்தில் உள்ள மாபெரும் திரைகளில் இறுதி நாள் சாகச நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் EXPO குழு தெரிவித்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap