அமீரகத்தில் உள்ள ஒரு முன்னணி வங்கி, அதன் கிரெடிட் கார்டுகள் மற்றும் வாகனக் கடன் துறைக்கு விற்பனை அதிகாரிகளை பணியமர்த்துகிறது. 5,000 திர்ஹம் வரை சம்பளம் மற்றும் பிற சலுகைகளை வழங்குகிறது.
வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அமீரகத்தில் அல்லது அவர்களது சொந்த ஊரில் காப்பீட்டுத் தயாரிப்புகளை விற்பதில் குறைந்தபட்சம் 1-2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், சிறந்த தகவல் தொடர்பு, பேச்சுத்திறமை, தனிப்பட்ட திறன்கள், கிரெடிட் கார்டுகள், வாகனம் மற்றும் தனிநபர் கடன்கள் குறித்து தெரிந்திருக்க வேண்டும். இளங்கலை பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் வேலைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு Dh3,500 முதல் Dh5,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் ஊக்கத் தொகை உள்ளிட்ட பிற சலுகைகள் கிடைக்கும். முன்னணி உள்ளூர் வங்கியின் விற்பனை நிர்வாகப் பணிகளுக்கான நேர்காணல் ஜனவரி 21, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
நேர்காணல் நடைபெறும் இடம்:
Moativ Employment Services, Masaood Tower 2, Office No 302, Port Saeed, Deira, Dubai
நேர்காணல் நடைபெறும் நேரம் :
காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நேர்காணல் நடைபெறும்.
சமீபத்தில் ஆட்சேர்ப்பு ஆலோசனை நிறுவனமான ராபர்ட் ஹாஃப் நடத்திய ஆய்வில், அமீரகத்தில் உள்ள ஊழியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அதாவது 65 சதவிகிதம் பேர் அதிக சம்பளம் மற்றும் சிறந்த பலன்களுக்கான வேலைகளை இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் தேட திட்டமிட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.
ஆய்வின் படி, ஊழியர்கள் இந்தாண்டிற்கான வேலை வாய்ப்புகள் குறித்து பாசிட்டிவாக உணர்கிறார்கள். 2021 ஆம் ஆண்டின் இறுதியில், 15 சதவிகிதத்தினர் புதிய வேலைக்களை தேட தொடங்கியுள்ளனர். இதே போல் மேலும் 19 சதவிகிதத்தினர் Q2வில் புதிய வேலைவாய்ப்புகை பெறுவார்கள். இது அவர்களுக்கு இந்தாண்டுக்கான போனசாக இருக்கும்.
வங்கித்துறையில் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு செய்தியை பகிருங்கள். வெற்றியடைய வாழ்த்துகள்.