UAE Tamil Web

அதிர்ஷ்டமில்லாதவர் எனத் திட்டிய மனைவி; மஹ்சூஸ் டிராவில் கலந்துகொண்டு கோடீஸ்வரரான கணவன்..!

Mahzooz-

இந்த வாரத்திற்கான மஹ்சூஸ் டிரா கடந்த 17 ஆம் தேதி நடந்து முடிந்திருக்கிறது. இதில் இரண்டாம் டையர் வெற்றியாளராக லெபனானை தாயகமாகக்கொண்ட அமீரக வாழ் தொழிலதிபர் பாஸிம் 10 லட்சம் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை தட்டிச்சென்றுள்ளார்.

1976 ஆம் ஆண்டு அமீரகத்திற்கு வந்திறங்கியபோது பாஸிமிற்கு வயது வெறும் 21 தான். தற்போது 67 வயதாகும் இவர் தொடர்ந்து மஹ்சூஸ் போட்டியில் பங்கேற்று வந்திருக்கிறார். கொரோனா காரணமாக தொழிலில் நஷ்டம், கடன் என நிதிச்சுமையில் தவித்துவந்த இவருக்கு இந்தப் பரிசுத்தொகை ஆசுவாசம் அளித்திருக்கிறது.

பாஸிமின் மனைவி அவரை எப்போதும் அதிர்ஷ்டமில்லாதவர் எனச் சொல்லுவாராம். அதனைப் பொய்யாக்க மஹ்சூஸ் டிராவில் கலந்துகொண்டிருக்கிறார் அவர். முடிவுகள் வெளியிடப்படும் வேளையில் அதனை உடனே பார்த்துவிடும் வழக்கம் கொண்ட பாஸிம், இந்த முறை முடிவைப் பார்க்கையில் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

இவர் குறிப்பிட்டிருந்த 1-2-16-18-36-45 என்ற எண் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து சந்தோஷத்தில் துள்ளிக்குதித்திருக்கிறார். இப்பணத்தைக் கொண்டு தனது குழந்தைகள், சகோதரி, சகோதரர் ஆகியோரின் வாழ்க்கையை ஒளிமிகுந்ததாக மாற்ற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்துப் பேசிய பாஸிம்,” என் மனைவி எப்போதும் என்னை அதிர்ஷ்டமில்லாதவர் எனக் கூறுவார். எப்போது நீங்கள் கலந்துகொள்கிறீர்களோ அப்போது தான் அதிர்ஷ்டமும் உங்களிடம் வரும். நீங்கள் கலந்துகொள்ளவில்லை எனில் எப்படி உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்? இத்தோடு நிறுத்திவிடாமல் இப்போட்டியில் தொடர்ந்து பங்கேற்பேன். 50 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசைப் பெறுவதே என் விருப்பம்” எனத் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டில் மஹ்சூஸ் டிராவில் 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுபெறும் 5 வது நபர் பாஸிம் ஆவார். மஹ்சூஸ் டிராவில் 1 மில்லியன் பரிசுபெறும் இரண்டாவது லெபனான் நாட்டுக்காரர் என்ற பெருமையும் பாஸிமிற்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் அபு அலி என்பவர் 1 மில்லியன் திர்ஹம்சை வென்றது குறிப்பிடத்தக்கது.

50 மில்லியன் திர்ஹம்ஸ் வெல்வது எப்படி?

இரண்டாம் பரிசுகளை பலர் வென்றிருந்தாலும் 50 மில்லியன் திர்ஹம்ஸ் தொகைக்கான டிரா ஏப்ரல் 24 ஆம் தேதி இரவு 9 மணிக்கு (அமீரக நேரப்படி) நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் மஹ்சூஸ் இணையதளத்தில் பதிவு செய்யலாம். நுழைவுக்கட்டணம் 35 திர்ஹம்ஸ் ஆகும்.

Mahzooz-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap