UAE Tamil Web

போலீஸ் காரை ஏக்கத்துடன் பார்த்த 9 வயது சிறுவன் – காரில் ஏற்றி, ஒட்டுமொத்த துபாயையும் சுற்றிக் காண்பித்த துபாய் போலீஸ்..!

dubai police

உலகப்புகழ் பெற்ற துபாய் காவல்துறையின் சொகுசுக் காரில் வலம்வரவேண்டும் என்ற 9 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறது துபாய் காவல்துறை.

லூகாஸ் லீ கேயாஸ் என்னும் சிறுவனின் தந்தை துபாய் காவல்துறையை நாடி, தனது மகனுக்கு துபாய் காவல்துறையின் காரில் துபாயின் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல மிகவும் ஆசை. அவனது ஆசையை நிறைவேற்றித் தரமுடியுமா? எனக் கேட்டிருக்கிறார்.

Dubai Cop car
Image Credit: Khaleej Times

அடுத்த சில நாட்களில் சிறுவனின் வீட்டிற்குச் சென்ற சுற்றுலா காவல்துறையின் அதிகாரிகள் சிறுவனை துபாய் முழுக்க சுற்றிக் காட்டியிருக்கிறார்கள். துபாய் காவல்துறையின் பிரத்யேக பொம்மையையும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

இதுகுறித்துப் பேசிய சிறுவனின் தந்தை, தனது மகன் வாழ்நாள் முழுவதும் நினைத்து சந்தோஷப்படும் வகையிலான செயலை நிகழ்த்திக்காட்டிய துபாய் காவல்துறைக்கு நன்றி என்றார். துபாய் காவல்துறையின்மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் சிறுவனின் கோரிக்கையை ஏற்ற காவல்துறைக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

dubai police
0 Shares
Share via
Copy link