UAE Tamil Web

வாழ்க்கைதான்…இந்தியாவிலிருந்து துபாய் வந்த எமிரேட்ஸ் விமானத்தின் ஃபர்ஸ்ட் கிளாஸில் பயணித்த ஒரே இந்தியர் – வைரல் வீடியோ..!

Gaurav Choudry

இந்தியாவின் புது தில்லியில் இருந்து துபாய்க்குப் பறந்த எமிரேட்ஸ் விமானத்தின் ஃபர்ஸ்ட் கிளாஸில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல யூடியுப் பிரபலமான கவுரவ் சவுத்ரி மட்டும் பயணித்துள்ளார்.

- Advertisment -

யூடியூப் மூலமாக 4.79 மில்லியன் மக்கள் இவரைப் பின்தொடர்கிறார்கள். தனது இந்த ஒன் மேன் ஷோவை வீடியோவாக சவுத்ரி வெளியிட்டுள்ளார். இரண்டே நாட்களில் இந்த வீடியோவை 880,000 பேர் பார்த்துள்ளனர். அதேபோல இவரது வீடியோவிற்கு 106,000 க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன.

இந்த வீடியோவில் சவுத்ரி பேசுகையில்,” ஃபர்ஸ்ட் கிளாஸ் பகுதியில் நான் மட்டுமே பயணிக்க இருக்கிறேன். நீங்கள் யாராவது இதற்கு முன்னர் இதனை அனுபவித்திருக்கிறீர்களா? எமிரேட்ஸ் நிர்வாகத்தின் சேவைக்கு வாழ்த்து சொல்லியே ஆகவேண்டும். குறிப்பாக இணைய சேவைக்கு. டவுன்லோடு வேகம் 10.1mbps லும், அப்லோடுக்கு 2.96 mbps வேகத்திலும் இணைய சேவை கிடைக்கிறது. நிலத்தில் கூட சில இடங்களில் இத்துனை வேகத்தில் இணையவேகம் கிடைக்காது” என்றார்.

எமிரேட்ஸ் நிர்வாகம் வழங்கும் உணவினை உண்ட சவுத்ரி, தனி ஜெட்டில் பறப்பதுபோன்ற அனுபவத்தை இது தருவதாக வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

விதவிதமான உணவுகளை ஒரு புடி புடிப்பதற்கு முன்னர் எழுமிச்சை, வெந்நீர் மற்றும் தேன் கலந்த கலவையின் மூலமாக தொண்டையை விருந்திற்குத் தயார் செய்வதாகத் தெரிவித்தார்.

போயிங் 777 விமானத்தில் நீங்கள் தனியாக பறப்பது ஓர் அலாதியான அனுபவமாகும். முன்னதாக தனது இருக்கை மற்றும் விமானத்தின் பகுதிகளை பார்வையாளர்களுக்கு சவுத்ரி காண்பித்தார்.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வருகையின்போது சவுத்ரிக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அவருக்கான குடியேற்ற பணிகள் 12 நிமிடத்தில் நடைபெற்றன.

எனது உடமைகளை எடுத்துக்கொண்டேன்.. தற்போது வீட்டிற்குச் செல்கிறேன் என்பது வரையிலும் நீடிக்கும் இந்த 12 நிமிட வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.