UAE Tamil Web

அபுதாபி இந்துக்கோவிலில் சிற்பங்கள் பதிக்கும் பணி துவக்கம்..!

hindu temple

அபுதாபியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுவரும் இந்துக் கோவிலில் சிற்பங்களை பதிக்கும் பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளன. ப்ரதம் ஷீலா ஸ்தாபன் சப்தா (Pratham Shila Sthaapan Saptah) என்றழைக்கப்படும் இந்த நிகழ்வானது வரும் நவம்பர் 16 ஆம் தேதிவரையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இளஞ்சிவப்பு மணற்கற்கள் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் 2,000 க்கும் மேற்பட்ட சிற்பிகளால் கையால் செதுக்கப்பட்ட பின்னர் இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு அனுப்பப்பட்டன. இந்த வரலாற்றுத் திட்டத்தில் பணியாற்ற 17 கல் கைவினைஞர்கள் கொண்ட குழு அமீரகம் வந்துள்ளது.

temple 2
Image Credit: Khaleej Times

BAPS நிர்வாகத்தின் தலைவர் பூஜிய பிரம்மவிஹாரி சுவாமி தலைமையில் 300 க்கும் அதிகமான பக்தர்கள் மற்றும் பிரமுகர்கள் முன்னிலையில் கோவிலின் அஸ்திவாரத்திலிருந்து ஐந்து அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பீடத்தில் சிற்பங்கள் பதிக்கும் பணிகள் துவங்கிவைக்கப்பட்டன.

இறுதி வடிவமைப்பின்படி, கோவிலில் ஏழு கோபுரங்களும் ஐந்து குவிமாடங்களும் இருக்கும். இந்த வளாகத்தில் பார்வையாளர் மையம், பிரார்த்தனை கூடங்கள், நூலகம், வகுப்பறை, சமூக மையம், மஜிலிஸ், ஆம்பிதியேட்டர், விளையாட்டுப் பகுதிகள், தோட்டங்கள், புத்தகங்கள் மற்றும் பரிசுக் கடைகள், உணவு அரங்கம் மற்றும் பல வசதிகள் இருக்கும் என பூஜிய பிரம்மவிஹாரி சுவாமி தெரிவித்தார்.

வரும் 2023 ஆம் ஆண்டு திறக்கப்படவுள்ள இக்கோவில் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

temple 3
Image Credit: Khaleej Times
hindu temple
15 Shares
Share via
Copy link