UAE Tamil Web

அபுதாபி: ஆகா.. அந்த திமிங்கிலமா இது..? அது பக்கத்துல கூட போய்டாதீங்க… எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்..!

whale

அபுதாபி சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் அங்குள்ள நீர்நிலைகளில் அவ்வப்போது சோதனை செய்வது வழக்கம். அப்படி அபுதாபி கடலில் நடைபெற்ற சோதனையில் அரியவகை பிரைட் திமிங்கிலத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இது அபுதாபி கடல்பகுதி செழுமையுடன் இருப்பதற்கான அறிகுறி என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதேநேரத்தில் வித்தியாசமான உயிரினங்களை கண்டால் பொதுமக்கள் 800555 என்ற எண்ணிற்கு போன் செய்து அரசுக்குத் தெரிவிக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

பலீன் வகையைச் சேர்ந்த இந்த பிரைட் திமிங்கிலம் 12 – 16 மீட்டர் வரையில் வளரக்கூயடியவை. கடலில் இந்தவகை திமிங்கிலங்களைப் பார்த்தால் அதற்கு அருகில் செல்ல பிரயத்தனப்படக்கூடாது என மக்களுக்கு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

whale
1 Share
Share via
Copy link