ஷேக் முகமது அவர்கள் அவரின் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் ஷேக்கா லதீஃபா பிந்த் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களது 4 மாத மகள் மற்றும் ஷேக்கா மரியம் பிந்த் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களது 5 மாத மகனுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
View this post on Instagram
இதை துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தை பேரக் குழந்தைகளை மடியில் வைத்து கொஞ்சுவது போன்ற இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படமானது ஐக்கிய அரபு அமீரகத்தின் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பகிரப்பட்டுள்ளது.
இந்த வருடத் தொடக்கத்தில் ஷேக் லதீஃபா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது தந்தை தன்னுடைய 3 வயது மகன் மற்றும் நான்கு மாத பெண் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதை நாம் பதிவிட்டிருந்தோம்.
View this post on Instagram
இதேபோல் கடந்த 2019 ஜூலை 15ஆம் தேதி ஹம்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் ஷேக் முகமது அவர்கள் தனது 70வது வயது பிறந்தநாளை தனது பேரக் குழந்தைகளுடன் சந்தோசமாக செலவிட்டதையும், ஷேக் முகமது அவர்கள் தனது காரில் இருந்து இறங்கும் போது தனது பேரக் குழந்தைகள் பாசத்துடன் ஓடி வந்து மகிழ்ச்சியாக முத்தம் கொடுப்பதும் வெளியானது. மேலும் அந்த வீடியோவில் ஷேக் ஹம்தான் தனது கையில் ஒரு குழந்தையை வைத்திருப்பதும் அந்த குழந்தைக்கு ஷேக் முகமது அவர்கள் பாசத்துடன் முத்தம் கொடுப்பதும் பார்ப்போர் கண்களை கவரும் வண்ணம் இருந்தது.
#Family ❤️ pic.twitter.com/jabuoM3kDH
— Hamdan bin Mohammed (@HamdanMohammed) July 15, 2019