UAE Tamil Web

35,000 குண்டூசிகளால் உருவாக்கப்பட்ட அமீரகத்தின் தந்தை முகம் – இந்தியரின் அசத்தல் முயற்சி..!

anil

அபுதாபியில் வசித்துவரும் இந்தியரான அனில் கும்பநாத் வித்தியாசமான முறையில் அமீரகத்தின் 50 வது தேசிய தினத்தைக் கொண்டாடியிருக்கிறார். 23 ஆண்டுகளாக அமீரகத்தில் வசித்துவரும் இவர் 35,000 குண்டூசிகளால் அமீரகத்தின் தந்தையான ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களுடைய முகத்தை உருவாக்கியிருக்கிறார்.

கவிதை எழுதுவது, ஆயில் பெயிண்டிங் என பல்வேறு துறைகளில் கலக்கும் அனில், சில அரபுப் பாடல்களையும் இயக்கியிருக்கிறார். இருப்பினும் 50 வது தேசிய தினத்தை வித்தியாசமாக கொண்டாடவேண்டும் என நினைத்ததாகவும் அதன்காரணமாக இம்முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் படைப்பை உருவாக்க 95 மணிநேரம் உழைத்திருக்கிறார் அனில். இவர் சூப்பர்வைசராகப் பணிபுரியும் இடமான மதீனத் சயீத் ஷாப்பிங் செண்டரில் இந்தப் படைப்பு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஷாப்பிங் வரும் மக்கள் அனிலின் இந்த முயற்சிக்கு வாழ்த்துத் தெரிவித்துவருகிறார்கள்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap