UAE Tamil Web

லூலூ ஷாப்பிங் மால் உரிமையாளர் சென்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது..!

helicaptor

லூலூ குரூப் இண்டர்நேஷனல் குழுமத்தின் தலைவர்  M.A. யூசப் அலி மற்றும் 6 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகியிருக்கிறது. கேரளாவின் கொச்சியின் எல்லைப்புறத்தில் உள்ள பணக்காட் என்னுமிடத்தில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.

கடும் காற்று மற்றும் கனமழை பெய்துகொண்டிருந்த காரணத்தினால் இந்த விபத்து நேர்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கீழே தரையில் விழுந்திருக்கிறது.

முதலில் ஹெலிகாப்டர் ஓட்டுனர் தனது இருக்கையிலிருந்து வெளியேறி பயணிகள் இருந்த இருக்கைகளின் கதவைத் திறந்துள்ளார். அதன்பின்னர் காயமடைந்த யூசப் அலி உள்ளிட்டோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

முக்கியத் தகவல் : விபத்து நேர்ந்த நேரத்தில், கேரள உள்ளூர் ஊடகங்கள் எங்களுக்கு அளித்த தகவலின் அடிப்படையிலேயே மேற்கண்ட கட்டுரை எழுதப்பட்டது. அதன்பின்னர் வெளிவந்த தகவல்களின்படி யூசப் அலி சென்ற ஹெலிகாப்டரானது அவசரமாக தரையிரங்கியது எனவும் இதனால் ஹெலிகாப்டரின் கீழ்ப்பகுதி சேதமடைந்ததாகவும் தெரிவிக்கட்டுள்ளது.

helicaptor
0 Shares
Share via
Copy link