UAE Tamil Web

லூலூ குழுமத்தின் பெயரில் பரப்பப்படும் போலி தகவல் – எச்சரிக்கும் நிறுவனம்..!

Lulu-fake

அமீரகத்தின் பிரபல ஷாப்பிங் மாலான லூலூ-வின் பெயரில் போலியான தள்ளுபடி செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. லூலூவின் 20 ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு இந்த தள்ளுபடியை வழங்குவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மொபைல் போன் ஒன்றினை வழங்குவதாக வெளிவந்திருக்கும் செய்தி உண்மைக்குப் புறம்பானது” என லூலூ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும் லூலூ-வின் பெயரைப் பயன்படுத்தி இதுபோன்ற மோசடி வேலைகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்துப் பேசிய லூலூ குழுமத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் தகவல் தொடர்புப் பிரிவின் உலகளாவிய இயக்குனர் நந்தகுமார்,” மோசடியாளர்கள் மீண்டும் புதிய ஐடியாவுடன் வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய உலகளாவிய வாடிக்கையாளர்கள் இதுபோன்ற போலியான தகவல்களை நம்பவேண்டாம் எனத் தெரிவித்துக்கொள்கிறோம்”

இந்த போலி இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் யாரும் தங்களது வங்கிகள் குறித்த தகவல்கள் கிரெடிட் கார்டு எண்களை உள்ளிட வேண்டாம். எங்களது நிறுவனங்களில் வழங்கப்படும் தள்ளுபடி குறித்த தகவல்கள் எங்களது அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் மட்டுமே வெளியாகும் என மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்” என்றார்.

Lulu-fake
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap