லூலூ குழுமத்தின் தலைவரான M.A. யூசப் அலி, இந்தியாவின் பிரதமரான திரு. நரேந்திர மோடியை சந்தித்தார். புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.
இந்த சந்திப்பின்போது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தாயகத்தில் முதலீடு செய்வதற்கு அரசு மேற்கொண்டுவரும் உதவிகளுக்கு யூசுப் அலி நன்றி தெரிவித்தார்.
Had a very wonderful & fruitful meeting with Shri @narendramodi ji, Hon’ble Prime Minister of India in New Delhi. Updated Hon’ble PM about our Group’s expansion plans & also expressed my wholehearted gratitude for all the help & support being provided for NRI Investments in India pic.twitter.com/knvcnuAVab
— Yusuffali M. A. (@Yusuffali_MA) October 14, 2021
இதுகுறித்து யூசுப் அலி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியை புதுதில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். எங்களுடைய குழும வளர்ச்சிப் பணிகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட திட்டங்களை அவரிடம் விளக்கினேன். மேலும் இந்தியாவில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்ய அரசு அளித்துவரும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
