தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 நாள் பயணமாக துபாய் சென்றுள்ள நிலையில், தமிழகத்துக்கு முதலீடுகளை கொண்டு வருவதற்காக பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த ஒப்பந்தத்தின்படி லுலு நிறுவனம், 3500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 3 திட்டங்களை தமிழகத்தில் மேற்கொள்ளவுள்ளது.
இதனை அடுத்து தமிழகம் முதல்வர், லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் யூசுஃப் அலி -ஐ நேற்று அவரது அபுதாபி இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, தமிழகம் முதல்வர் முன்னிலையில் லுலு நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. லுலு நிறுவனம், 3,500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், 3 திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது.
அதில், 2,500 கோடி ரூபாய் முதலீடுகளில் 2 வணிக வளாகங்கள் மற்றும் 1,000 கோடி ரூபாய் முதலீடுகளில் ஒரு ஏற்றுமதி சார்ந்த உணவு பதப்படுத்தும் திட்டத்தை லுலு நிறுவனம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
அதையடுத்து அபுதாபியில் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இறுதியாக துபாய், அபுதாபி பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து விமானம் மூலம் தமிழகத்திற்குப் புறாப்பட்டார்.