வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ. 50 மில்லியன் தருவதாக அறிவித்த அமீரக தொழில் ஜாம்பவான் M.A. யூசுப் அலி.!

இந்தியா கேரளா மாநிலத்தை சேர்ந்த அமீரகத்தின் தொழில் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் M.A. யூசுப் அலி (Chairman and Managing Director of Lulu Group) அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.50 மில்லியன்(5 கோடி ருபாய்) தருவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக M.A. யூசுப் அலி அவர்கள் கேரளா மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு நன்கொடை வழங்குவதாக தெரிவித்தார்.

அதே போல், கேரளாவில் 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது M.A. யூசுப் அலி அவர்கள் கேரள வெள்ள நிவாரணத்திற்காக ரூ.80 மில்லியனை(8 கோடி) வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இதை தவிர மற்ற மூன்று மலையாள ஊடக நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தனி நிதியும் வழங்கப்பட்டது என்று செய்தித் தொடர்பாளர் Gulf செய்திக்கு தெரிவித்தார்.

கலீஃபா பின் சயீத் மனிதாபிமான அறக்கட்டளை மூலம் அதே வெள்ளத்திற்காக அவர் மற்றொரு 5 மில்லியன் திரகத்தை நன்கொடையாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, LuLu-வின் ஊழியர்களும் முதலமைச்சரின் துயர நிவாரண நிதிக்கு ரூ.100 மில்லியனை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்திற்குப் பிறகு கேரளாவை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியாவை சேர்ந்த பல அமீரக தொழில் அதிபர்கள் / வர்த்தகர்கள் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய பிறகு நிவாரண நிதியை அறிவித்த முதல் NRI தொழிலதிபர் M.A. யூசுப் அலி என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...