நேற்று மே 21ம் தேதி, சனிக்கிழமையன்று நடைபெற்ற 77வது Mahzooz குலுக்கல் போட்டியில் மொத்தம் இருபத்தி இரண்டு அதிர்ஷ்டசாலிகள் இரண்டாம் பரிசான 1 மில்லியன் திர்ஹம் பரிசு பணத்தை பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து வெற்றியாளர்களும் தலா 45,454 திர்ஹம்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர், நேற்று நடந்த வாராந்திர நேரலை டிராவில் 969 பங்கேற்பாளர்கள் ஐந்து எண்களில் மூன்றைப் பொருத்தி, மூன்றாவது பரிசாக தலா 350 திர்ஹம்களைப் பெற்றனர்.
ஒவ்வொரு வாரமும் போலவே, ரேஃபிள் டிராவில் மூன்று அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் தலா 1,00,000 திர்ஹம்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
இந்த சனிக்கிழமை, மே 28, இரவு 9 மணிக்கு நடைபெறும் கிராண்ட் டிராவில், 10 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசு அளிக்கப்படவுள்ளது. வரும் வாரத்தில், இரண்டாம் பரிசு 1 மில்லியன் திர்ஹம்களுக்குப் பதிலாக இருமடங்காக 2 மில்லியனாக உயர்த்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை பங்கேற்க விரும்பும் நபர்கள் www.mahzooz.ae என்ற இணையம் மூலம் பதிவுசெய்து 35 திர்ஹம்களுக்கு ஒரு பாட்டில் தண்ணீர் வாங்குவதன் மூலம் Mahzoozல் பங்கேற்கலாம்.