அமீரகத்தில் நடந்த Mahzooz Drawவில் Dh10 மில்லியனை வென்று மாபெரும் அத்ரிஷ்டசாலியாக மாறியுள்ளார் ஒருவர். மேலும் இந்த போட்டியில் பங்கேற்ற 999 பேர் Dh11,641,600 பரிசு தொகையை சமமாக பங்கிட்டுகொண்டனர்.
இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற அந்த நபர் 13, 30, 38, 41, 44 என்ற 5 வெற்றி எண்களையும் சரியாக கணித்து வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் Mahzooz Draw அவருடைய வாழ்க்கையையே மாற்றியுள்ளது.
மேலும் இந்த போட்டியில் பங்கேற்ற பத்தொன்பது பங்கேற்பாளர்கள் ஐந்து எண்களில் நான்கை சரியாக பொருத்திய நிலையில், தலா Dh52,631களை வென்றனர். அவர்கள் Dh1,000,000 இரண்டாவது பரிசைப் பகிர்ந்து கொண்டனர் என்று Mahzooz தெரிவித்துள்ளது.
முஹம்மது, மேத்யூ மற்றும் பெஹ் ஆகியோர் ராஃபிள் டிராவில் தலா 1,00,000 திர்ஹம்களை வென்றனர். ஐந்து எண்களில் மூன்றை பொருத்தக்கூடிய பங்கேற்பாளர்கள் தலா 350 திர்ஹம்களை வென்றனர்.
Mahzoozல் பங்கேற்க விரும்புபவர்கள் www.mahzooz.ae மூலம் பதிவுசெய்து 35 திர்ஹம்களுக்கு ஒரு பாட்டில் தண்ணீர் வாங்குவதன் மூலம் Mahzoozல் பங்கேற்கலாம். வாங்கப்பட்ட ஒவ்வொரு பாட்டிலுக்கும், பங்கேற்பாளர்கள் கிராண்ட் டிராவில் ஒரு வரிக்கு தகுதியுடையவர்கள் மற்றும் வாராந்திர ரேஃபிள் டிராவில் தானாக நுழைய முடியும்.
அதில் மூன்று அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் தலா Dh100,000 வீட்டிற்கு எடுத்துச் செல்வார்கள்.