UAE Tamil Web

மஹ்சூஸ் டிராவில் வெற்றிபெற்ற தொகையில் ரமலான் மாதத்தில் இல்லாதோருக்கு உதவும் இந்தியாவைச் சேர்ந்த ராமநாதன்!

துபாயின் வாராந்திர மஹ்சூஸ் ரேஃபிள் டிராவில் இரண்டு இந்தியர்கள் தலா 1 லட்சம் திர்ஹம்ஸை பரிசாக வென்று அசத்தியுள்ளனர்.

இந்தியாவில் வசிக்கும் 35 வயதான ராமநாதன் என்பவர், ரேஃபிள் டிரா வெற்றி குறித்து கூறுகையில், “மஹ்ஜூஸ் டிராவில் பங்குபெற்றதில் இருந்து நான் வெற்றிபெறுவேனா என்று மெயில்-ஐ தினமும் சோதனையிட்டுக் கொண்டே இருந்தேன். இறுதியாக நான் வெற்றிபெற்றுவிட்டேன். ரமலானில் நான் வெற்றி பெற்றதால், மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் எனது இறைவனின் ஆசிர்வாதத்தை பெற விரும்பிகிறேன். மீதித் தொகையை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய உள்ளேன்,” என்றார்.

மற்றொரு வெற்றியாளரான சூரஜ் என்பவர் அபுதாபியில் ஆப்டிகல்ஸ் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார். “தான் வெற்றிபெற்ற தொகையில் ஆப்டிகல் கடை துவங்க் இருப்பதாகவும், மஹ்சூஸில் தொடர்ந்து பங்கேற்பதகவும் அவர் உறுதியாக அளித்தார்.

ஈத் அல் பித்ர் (நோன்பு பெருநாள்) கொண்டாடும் வகையில் ஏப்ரல் 30 அன்று நடைபெறும் சிறப்பு ரமலான் மெகா ரேஃபிள் டிராவின் ஒரு பகுதியாக 2022 நிசான் பேட்ரோல் பிளாட்டினம் V8 ஐ காரை வெல்வதற்கான வாய்ப்பை இந்த வெற்றியாளர்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 Shares
Share via
Copy link
Powered by Social Snap