ஷார்ஜாவின் தொழிற்துறை பகுதி ஷேக் முகமது பின் ஜயித் தெருவிலிருந்து அல்-கவாசாத் சாலையில் உள்ள ஷேக் கலீஃபா பின் ஜயித் தெரு அபு ஷகாரா சுரங்கப் பாதையின் வலது பக்கத்தில் அமைந்துள்ள வழியை பராமரிப்பு பணிக்காக மூடுவதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 9ஆம் தேதியான இன்று சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை இந்த சாலை மூடல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாற்று பாதைகளின் வாகனத்தை கவனத்துடன் ஓட்டுமாறு ஷார்ஜா RTA அறிவுறுத்தியுள்ளது.