அபுதாபியில் உள்ள ஷேக் ஜயித் பின் சுல்தான் சாலையின் E10 பகுதி நாளை முதல் 10 நாட்களுக்கு மூடப்படும் என்று நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து ஒருங்கிணைந்த துறை (ITC) தெரிவித்துள்ளது.
துபாய் செல்லும் ஷேக் ஜயித் பின் சுல்தான் சாலையின் வலதுப்புற பாதை நாளை முதல் 10 நாட்களுக்கு மூடப்படும் என்றும் பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 25 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இந்த மூடல் நீடித்து இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வாகன ஓட்டிகள் வண்டியை கவனத்துடன் இயக்குமாறும், சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறும் அபுதாபி நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து ஒருங்கிணைந்த துறை வலியுறுத்தியுள்ளது.