துபாய் ஷேக் முகமது பின் சயீத் சாலையில் பெரும் விபத்து; போக்குவரத்து கடுமையான பாதிப்பு!

Major accident on Dubai's Sheikh Mohammed bin Zayed Road causes delays (Photo: Khaleej Times)

துபாயில் ஷேக் முகமது பின் சயீத் சாலையில் இன்று புதன்கிழமை காலை பெரும் விபத்து ஏற்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அல் மனாமா தெரு பாலத்தின் திசையில், ஷேக் முகமது பின் சயீத் சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து துபாய் போலீசார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தனர்.

இதனை அடுத்து, ஓட்டுநர்கள் கவனமாக வாகனம் ஓட்டவும், சாத்தியமான மாற்று வழிகளைக் கண்டறிந்து செல்லவும், அவர்கள் பரிந்துரைத்தனர்.

மற்றொரு ட்வீட்டில் துபாய் போலீசார் கூறுகையில், மாணவர்களின் பாதுகாப்பிற்காக பள்ளி பகுதிகளுக்கு அருகிலுள்ள லோக்கல் கிராசிங் காவலர்களின் நடைமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு இணங்கும் படி வாகன ஓட்டிகளை அறிவுறுத்தினர்.

Loading...