UAE Tamil Web

துபாயில் பிரதான சாலைகள் நாளை மூடல்.. காரணம் என்ன தெரியுமா..?

துபாயில்  “UAE WORLD TOUR” எனும் சர்வதேச சைக்கிள் போட்டி நடக்க உள்ளதால் பெரும்பாலான சாலைகள் இன்று  தற்காலிகமாக மூடப்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமான (RTA) தெரிவித்துள்ளது.

இது குறித்து ட்விட்டரில் RTA தெரிவித்துள்ளதாவது, ““UAE WORLD TOUR” சைக்கிள் பந்தயம் இன்று நடக்க இருப்பதால் பிப்ரவரி 25, 2022 வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி முதல் மாலை 4:30 மணி வரை சலைகள் தற்காலிகமாக மூடப்படும். இதனால் மாற்று வழியை பயன்படுத்தவும்” என்று தெரிவித்துள்ளது.

இந்த சைக்கிள் போட்டி EXPO 2020 தளத்திலிருந்து துவங்கி மீண்டும் எக்ஸ்போ தளத்திலேயே முடிவடையும். துபாயின் முக்கிய சாலைகளான ஷேக் ஜயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் சாலை, அல் யலாயிஸ் சாலை, ஷேக் முகமது பின் ஜயீத் சாலையின் ஒரு பகுதி, துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி செல்லும் ஜூமைரா கோல்ஃப் கார்டன்ஸ் சாலை மற்றும் துபாய் மோட்டார் சிட்டியில் உள்ள ஹெஸ்ஸா ஆகிய சாலைகளின் வழியாக இந்த சைக்கிள் போட்டி நடைபெறும்.

அதே போன்று அல் வர்கா, மிர்திஃப், ரஷிதியா மற்றும் ரஸ் அல் கோர் சாலை, மெய்தான் தெரு, ஜபீல் மற்றும் அல் வாஸ்ல் தெருக்களில் உள்ள சில சாலைகளும் இந்த சைக்கிள் பந்தயத்தால் மூடப்படும். பின்னர் துபாயின் மையப்பகுதியான டவுன்டவுன் பகுதி, பாம் ஜூமைரா, துபாய் மெரினா வழியாக போட்டியின் இறுதி இலக்கான EXPO 2020-ஐ போட்டியாளர்கள் அடைவார்கள் என்றும் RTA தெரிவித்துள்ளது.

இதனால் எந்த சாலைகள், குறிப்பிட்ட நேரங்களில் மூடப்படும் என்பதையும், அதற்கான மாற்று பாதைகளையும் RTA வீடியோ மூலம் ட்விட்டர் பக்கத்தில் வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையிலும் வெளியிட்டுள்ளது.

2 Shares
Share via
Copy link