அமீரகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு குர்ஆன் மற்றும் இஸ்லாமிய மார்க்க சட்ட திட்டங்கள் கற்பிக்கும் வகையில் மக்தப் மத்ரஸா நடைபெற்று வருகிறது.
துபாய் மர்கஸ் சார்பில் திருக்குர்ஆனை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் படிப்பதற்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழ் வழியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு துபாய் மர்கஸ் பகுதியில் நடத்தப்படுகிறது.
மேலும், தமிழ் மொழியை படிக்கத் தெரியாதவர்களுக்கு தமிழ் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது. தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம் மற்றும் மலையாளத்திலும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த வகுப்பில் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ள வசதியாக துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வாகன வசதி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வருகிற 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை ‘ரமலானே வருக’ என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் மொழி வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மாணவர்களை சேர்த்திட 0562468913, 0504732833, 042973999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.