அமீரகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு குர்ஆன் மற்றும் இஸ்லாமிய மார்க்க சட்ட திட்டங்கள் கற்பிக்கும் வகையில் மக்தப் மத்ரஸா துவங்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் இயங்கி வரும் துபாய் மர்கஸில் தமிழ் மக்தப் மத்ரஸா அபூஹைல், துபாய் மருத்துவமனை அருகிலுள்ள மர்கஸில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஈமான் கலாச்சார மையத்தின் தலைவர் கீழக்கரை அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபீபுல்லா கான் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில் மாணவர்களை மத்ரஸாவை பயன்படுத்தி மார்க்க கல்வி கற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்றார்.
மத்ரஸா சேர்க்கைக்கான முதல் விண்ணப்பத்தை வழங்கி துபாய் மர்கஸ் தலைவர் டாக்டர் சலாம் சகாஃபி துவங்கிவைத்தார். மௌலவி நூருத்தீன் ஸகாஃபி உலக சமாதானத்தினற்கும், கொரானாவிலிருந்து விடுபடுவதற்கும் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
இந்த விழாவில் வர்த்தக பிரமுகர் தமிழகம், கேரளாவைச் சேர்ந்த ஆலிம்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த மக்தப் மத்ரஸா 13 பிப்ரவரி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் மதியம் 12 மணி வரை நடைபெறும் என மர்கஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாணவர்களை சேர்த்திட 0562468913, 0504732833, 042973999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.