UAE Tamil Web

அமீரகத்தின் கோல்டன் விசாவைப் பெற்றார் மோகன்லால் – உதவி செய்த யூசுப் அலிக்கு நன்றி தெரிவிப்பதாக உருக்கம்..!

Mohanlal-gets-the-UAE-Golden-Visa

மலையாள திரைப்படத்துறையின் ஜாம்பவானான மோகன்லாலுக்கு 10 வருடத்திற்கான அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. பாலிவுட் நட்சத்திரமான சஞ்சய் தத்திற்கு பிறகு கோல்டன் விசாவைப் பெறும் இரண்டாவது இந்திய நடிகர் என்ற பெருமையை மோகன்லால் பெறுகிறார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,”ஐக்கிய அரபு அமீரகத்திற்கான கோல்டன் விசாவை எனக்கு வழங்கிய எச் இ முகமது அலி அல் ஷோரஃபா அல் ஹம்மாதிக்கு எனது நன்றிகள். நான் உண்மையிலேயே பெருமைகொள்கிறேன். இதை எளிதாக்கிய திரு யூசுப் அலிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் கேரளாவின் பிரபல நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு கோல்டன் விசாவை வழங்குவதாக அமீரக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohanlal-gets-the-UAE-Golden-Visa
5 Shares
Share via
Copy link