UAE Tamil Web

வெடித்துச் சிதறிய உணவகம் – ஒருவர் பலி – காவல்துறை தீவிர விசாரணை..!

Explosion_

புஜைராவில் நேற்று மாலை உணவகம் ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு பணிபுரிந்துவந்த 44 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்திருக்கிறார். அதன் காரணமாக மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக புஜைரா சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

இறந்தவருக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும் அவர் கடந்த 20 ஆண்டுகளாக அமீரகத்தில் வசித்துவந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்னர்.

இவ்விபத்து எப்படி ஏற்பட்டது என நிபுணர்கள் ஆய்வு செய்துவருவதாக பாதுகாப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

இறந்தவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, புஜைராவிலேயே அடக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Explosion_
3 Shares
Share via
Copy link