UAE Tamil Web

அமீரகத்தில் கனமழை: திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய கார் ; சடலமாக மீட்கப்பட்ட 65 வயது நபர்..!

flood

புஜைராவில் நேற்று கனமழை பெய்ததன் விளைவாக பல தாழ்வான இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் வாதி அல் சித்ர் பகுதியைச் சேர்ந்த 65 நபர் ஒருவர் சிக்கி உயிரிழந்திருப்பதாக புஜைரா காவல்துறை தெரிவித்துள்ளது.

மழை பெய்துகொண்டிருந்த வேளையில் தனது பண்ணையிலிருந்து காரில் கிளம்பிச் சென்ற நபர் வெள்ளத்தில் சிக்கியிருக்கிறார். இதனால் காரோடு அடித்துச்செல்லப்பட்ட நபரை அல் ஹில்லா பகுதியில் சடலமாக மீட்டிருக்கிறது காவல்துறை.

கனமழை பெய்யும் நேரத்தில் மக்கள் யாரும் மலைப்பாங்கான இடங்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் வழியாக செல்ல வேண்டாம் எனவும் திடீர் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு அங்கே அதிகமென்பதால் அதனைத் தவிர்க்குமாறும் காவல்துறை மக்களை எச்சரித்துள்ளது.

flood
6 Shares
Share via
Copy link