UAE Tamil Web

துபாய்: 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய இந்தியர் – தண்டனையை அறிவித்தது நீதிமன்றம்..!

teenager sexual abusement

12 வயது சிறுமியின் அந்தரங்க இடங்களைத் தீண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட இந்தியர் மீதான வழக்கு இன்று துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் துபாய் பவுண்டைனில் நீர் விளையாட்டைப் பார்க்க தனது அம்மாவுடன் சென்றிருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண். பவுண்டைனின் அருகில் உள்ள ரெஸ்டாரண்டின் வெளியே நின்று பவுண்டைனைப் பார்த்திருக்கும் வேளையில் பின்னால் யாரோ தொடுவது போல் இருந்திருக்கிறது.

டக்கென்று திரும்பிப் பார்த்தபோது பின்னால் நின்றுகொண்டிருந்த இந்தியர், தானும் பவுண்டைனைப் பார்ப்பதுபோல நடித்திருக்கிறார். சிறிதுநேரத்தில் மீண்டும் தனது வேலையை இந்தியர் காட்டியிருக்கிறார். உடனடியாக தனது அம்மாவின் துணையோடு துபாய் காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார் சிறுமி.

சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறை இந்தியரைக் கைது செய்தது. காவல்துறை விசாரணையில் தனது குற்றத்தை இந்தியர் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், நீதிமன்ற விசாரணையில் தான் நிரபராதி என இந்தியர் தெரிவித்திருக்கிறார்.

காவல்துறை விசாரணைக் குறிப்பில், இந்தியரின் வாக்குமூலம் தெளிவாக இருந்தது. நீர் விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்த சிறுமியை தான் தொட்டதாக காவல்துறையிடம் அவர் தெரிவித்தது குறிப்பின் மூலம் வெளிவரவே, நீதிமன்றம் அவருக்கு 3 மாத சிறைத்தண்டனை விதித்தது.

மேலும், தண்டனைக்காலம் முடிவடைந்தவுடன் அவர் நாடுகடத்தப்படவேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

15 நாட்களுக்குள் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி மேல்முறையீடு செய்யலாம் என அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

teenager sexual abusement
4 Shares
Share via
Copy link