துபாயில் பெண் போலிஸ் போன்று நடித்து, அப்பாவி பெண்ணிடம் 6700 திர்ஹம்ஸை திருடிய நபருக்கு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரனையில், குற்றவாளி தான் ஒரு சிஐடி அதிகாரி என்று பாதிக்கப்பட்ட பெண்ணை நம்ப வைக்க துபாய் பெண் போலிஸ் போன்று நடித்து, அவரை தாக்கியுள்ளார். பின்னர் அப்பெண்ணிடம் இருந்த 6,700 திர்ஹம்ஸ் பறித்து சென்றுவிட்டார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவர் பெண்களின் உடையை அணிந்திருந்தார், மேலும் அவர் முகத்தை மறைத்திருந்தார். அப்போது அவர் ஒரு பெண் என்று தான் நினைத்தேன். ஆனால் அவர் பேசும்போது ஆண் குரல் கேட்டு சந்தேகம் எழுந்தது. பின்னர் அவர் துபாய் காவல்துறையின் சின்னம் கொண்ட அடையாள அட்டையைக் காட்டினார். பின்னர் என்னைத் தாக்கி 6700 திர்ஹம்ஸை அவர் திருடிச் சென்றுவிட்டார்” என்றார்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறைக்கு புகார் தெரிவித்ததை அடுத்து போலிஸார் குற்றவாளியை கைது செய்தனர்.
இந்நிலையில் குற்றவியல் நீதிமன்றம் குற்றவாளிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 6,700 அபராதம் விதித்து உத்தரவிட்டது.