ஷார்ஜாவின் முவைலா பகுதியில் 12 வாகனங்களை சேதப்படுத்திய நபர் ஒருவர் கைது காவல்துறையால் செய்யப்பட்டுள்ளார்.
ஷார்ஜாவின் முவைலா பகுதியில் ஒரு நபர் வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்த வாகனங்களை சேதப்படுத்திக் கொண்டிருப்பதாக ஷார்ஜா போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை விசாரணை நடத்தி, அங்கிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளில் அந்த நபர் வாகனங்களை சேதப்படுத்துவதை கண்டனர்.
இதனை அடுத்து 12 வாகனங்களை சேதப்படுத்திய நபர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காவல்துறை அடையாளம் கண்டு அந்த குற்றவாளியை கைது செய்தது.
இந்த குற்றச் செயலைச் செய்யும்போது குற்றவாளி மதுபோதையில் இருந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. மேலும் குற்றவாளி தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் நடவடிக்கைக்காக பொது வழக்குத் துறைக்கு அனுப்பபட்டார்.