UAE Tamil Web

துபாயில் முன்னாள் காதலியின் அநாகரீக புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு மிரட்டியவருக்கு என்ன தண்டனை தெரியுமா..?

துபாயில் தனது முன்னாள் காதலியின் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட 34 வயது நபருக்கு சிறைத்தண்டனை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துபாய் குற்றவியல் நீதிமன்றம், முன்னாள் காதலியின் அநாகரீகமான புகைப்படங்களை பேஸ்புக் கணக்கில் பதிவிட்ட  ஆசிய நாட்சைச் சேர்ந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும் அவர் வாட்ஸ் அப்பிலும் அப்பெண்ணின் கணவர் மற்றும் சகோதரருக் அந்த புகைப்படங்களை அனுப்பி மிரட்டியுள்ளார்.

இந்த வழக்கு விவரங்களின்படி, துபாயில் உள்ள ஒரு மாலுக்கு அப்பெண்ணும் அவரது கணவரும் சென்றிருக்கையில், மொபைல் போன் திருடப்பட்டதாகவும், தனது முன்னாள் காதலன் தன்னை மிரட்டிவருவதாகவும் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

மாலுக்கு எனது கணவருடன் சென்றபோது, ​​முன்னாள் காதலன் தனது போனை திருடி அதிலிருந்த புகைப்படங்களை அவனது மொபைலுக்கு ஷேர் செய்து கொண்டதாக போலீஸில் அந்த பெண் தெரிவித்தார். அத்துடன அந்த பெண்ணின் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதோடு, கணவருக்கும் அனுப்பி மிரட்டியுள்ளார்.

இதனை அடுத்து காவல்துறையின் தவிர தேடலில் குற்றவாளியை கைது செய்தனர். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றங்களை ஒப்புக்கொண்டதால், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அதன் பின்னர் அவரை நாடு கடத்தவும் துபாய் குற்றவியல் நீதிமன்ற உத்தரவிட்டது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap