Sharjah: எப்போதுமே பாதுகாப்பு உபகரணங்களுடன் தான் தண்ணீரில் இறங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகிறது. இதனை சிலர் கண்டுக்கொள்ளாமல் செய்யும் சில விஷயங்களால் உயிரிழப்பு வரை செல்வதாக ஷார்ஜா காவல்துறை தெரிவித்து இருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை மாலை (ஜனவரி 22) மத்திய செயல்பாட்டு அறைக்கு அரபு நாட்டினை சேர்ந்த நபர் கால் செய்கிறார். அவர் அளித்த புகாரில் Al-Mamzar கடற்கரையில் ஒரு ஆசிய தம்பதியினர் நீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருப்பதாகவும், விரைவில் வந்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த புகாரைப் பெற்றவுடன் மீட்புக் குழுக்கள் மற்றும் போலீஸ் ரோந்துகள் சம்பவத்தை இடத்துக்கு சென்றது.
அங்கு சென்றவுடன் நேரம் தாமதிக்காமல் கடலில் குதித்த மீட்புக்குழுவினர் மனைவியை உயிருடன் மீட்டனர். ஆனால் நீரில் மூழ்கிய கணவர் சடலமாகவே மீட்கப்பட்டார். இருந்தும் அவருக்கு மீட்பு குழுவினர் செயற்கை சுவாசம் கொடுத்தும் முதலுதவி அளித்து பார்த்தனர். ஆனால் அதற்கு அவரிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை. பின்னர் இதுகுறித்து விசாரிக்கும் போது நீரில் மூழ்கிய மனைவியைக் காப்பாற்ற முயன்றபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இறந்தவரின் மரணத்திற்கான காரணம் குறித்து சார்ஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து பேசிய காவல்துறை, பொதுமக்கள் மோசமான வானிலை இருக்கும் போது கடலில் இறங்குவதை தவிர்க்க வேண்டும். உயிர் பாதுகாக்க நாட்டிலுள்ள இருக்கும் அதிகாரிகளால் வழங்கப்பட்ட உத்தரவுகளைப் பின்பற்றவும் மீட்பு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே நீச்சல் பயிற்சி செய்யவும், தடை செய்யப்பட்ட பகுதிக்குள் மக்கள் நுழையாமல் இருக்கவும், பகல் நேரத்தில் மட்டுமே நீந்த வர வேண்டும் என பல வழிகாட்டு நெறிமுறைகளை ஆய்வாளர்கள் பொதுமக்களுக்கு மீண்டும் தெளிவுப்படுத்தி இருக்கின்றனர்.