ஷார்ஜா கடலில் மூழ்கி ஒருவர் பலி..!

ஆசியா கண்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஷார்ஜா கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அப்பகுதி ஊடகம் தெரிவித்துள்ளது.

கடற்கரைக்கு சென்றவர்களில் ஒருவர் பாதுகாப்பு படையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் ஆம்புலன்ஸ் உடன் ஷார்ஜா கடற்கரைக்கு விரைந்து சென்று சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் தேடலுக்கு பிறகு சடலம் மீட்கப்பட்டு மேற்படி காரியங்களுக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி நடக்க வேண்டும், என்று ஷார்ஜா போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆபத்தான கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறியுள்ளது.

Source: Khaleej Times

Loading...