UAE Tamil Web

துபாய்: சாலையில் நின்றுகொண்டிருந்தவரை தூக்கிவீசிய கார் – சம்பவ இடத்திலேயே மரணமடைந்த பரிதாபம்..!

Stock-Dubai-Police

துபாய் – அல் அய்ன் சாலையில் நேற்று அதிகாலை 1 மணியளவில் தனது வாகனத்தில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக காரை ஓரமாக நிறுத்திவிட்டு உதவிக்காக காத்திருந்திருக்கிறார் ஒருவர். அந்நேரம் பார்த்து அதிவேகத்தில் வந்த கார் ஒன்று அவர் மீது மோதியிருக்கிறது.

இதனால் தூக்கிவீசப்பட்ட அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். விபத்தை ஏற்படுத்தியவர் அந்த இடத்தைவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்திருக்கிறார். இதனையடுத்து விசாரணையைத் துவங்கிய காவல்துறை 24 மணிநேரத்திற்குள் விபத்து ஏற்படுத்திய ஆசாமியைக் கைது செய்திருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய புர் துபாய் காவல்நிலையத்தின் இயக்குனர் பிரிகேடியர் அப்துல்லா காதிம்,” விபத்து ஏற்படுத்தியது அவர் செய்த முதல் குற்றமாகும். அதன்பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் அந்த இடத்தைவிட்டு தப்பித்துச் சென்றது இரண்டாவது குற்றமாகும்” என்றார்.

வாகனவோட்டிகள் வேகக் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்கவேண்டும் எனவும் போக்குவரத்து விதிமுறைகளைக் கவனமாக பின்பற்றவேண்டும் எனவும் துபாய் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

Stock-Dubai-Police
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap