UAE Tamil Web

காதலியிடம் 48 லட்சத்தினை அபேஸ் செய்த காதலன்… இறந்து விட்டதாக நாடகம்… ஆனா கடைசியில் நடந்த மேட்டர் தான் செம ட்விஸ்ட்டு… வாழ்க்கையும் போச்சு! காசும் போச்சு!

பெரும்பாலும் காதலர்கள் உண்மையாக இருந்தால் குரூப்பில் டூப் ரீதியில் சிலர் உலா வந்து கொண்டு தான் இருக்கின்றனர். அந்த வகையில் காதலன் ஒருவரால் காதலி நீதிமன்ற படியேறி கூட தோற்ற சம்பவம் பலருக்கு உச்சு கொட்ட வைத்து இருக்கிறது.

ஒரு இளம் பெண் தனது காதலன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டு இறந்து விட்டதாக நாடகம் ஆடியதாக கூறி வழக்கு தொடர்ந்தார். மேலும் அந்த வழக்கில், தன்னிடம் கடன் வாங்கியதாகக் கூறப்படும் 215,000 திர்ஹம்களை திருப்பிச் செலுத்தியதாகக் குற்றம் சாட்டி தாக்கல் செய்துள்ளார்.

அரேபியாவை சேர்ந்த 20களில் இருக்கும் இவரின் காதலன் காதலியிடம் கேன்சரில் தான் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். அதற்கு தனக்கு பல லட்சம் பணம் தேவைப்படும். கொடுத்து உதவுமாறு கேட்டுள்ளார்.

இதை கேட்ட காதலி திருமணத்துக்கு முன்னர் அவர் குணமாக வேண்டு என ஆசைப்பட்டு இருக்கிறார். உடனே தன்னிடம் இருந்த சேவிங்ஸை அனைத்தையுமே எடுத்து காதலனிடம் கொடுத்து விட்டார். இந்த தொகை கிட்டத்தட்ட 215,000 திர்ஹம்கள் எனக் கூறப்படுகிறது. அதை வாங்கிய காதலன் இது கடன் தான் கண்டிப்பாக திருப்பி கொடுத்து விடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆனால் அடுத்த சில தினத்தில் இருந்து காதலனின் செல்போன் எண் ஆஃபில் இருந்து இருக்கிறது. சரி சிகிச்சைக்கு சென்று இருப்பார் என நினைத்து கொண்ட காதலி தன்னுடைய வேலைகளில் பிஸியாகி இருக்கிறார். இருந்தும் காதலனிடம் இருந்து எந்த காலும் வராமல் போக கவலையடைத்து இருக்கிறார். பின்னர் தனது காதலன் இறந்துவிட்டதாக பிரதிவாதியின் சகோதரர் தனக்குத் தெரிவித்தபோது அதிர்ச்சியடைந்ததாக அந்தப் பெண் கூறினார்.

ஆனால் அடுத்த சில தினங்களிலேயே அது பொய் என்பதை தெரிந்து கொண்டு இருக்கிறார். இது பொய்யானது என்று அவர் கூறினார். தொடர்ந்து, காதலி அவரிடம் சென்று பேசி இருக்கிறார். தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும், பணத்தைத் திருப்பித் தருவதாகவும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி கேட்டபோது, அந்த நபர் மறுத்துவிட்டார்.

இதனால் அந்தப் பெண், தன்னிடம் இருந்து கடனாகப் பெற்ற 215,000 திர்ஹம்களைத் திருப்பித் தருமாறு கோரி அவரை அபுதாபி குடும்ப மற்றும் சிவில் நிர்வாக வழக்குகள் நீதிமன்றத்திற்கு அழைத்து இருக்கிறார். நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது அந்த நபர் அந்தப் பெண்ணிடம் கடன் வாங்கியதை மறுத்தார்.

இரு தரப்பிலிருந்தும் கேட்டறிந்த நீதிபதி, அந்த பெண் தான் உண்மையில் கடன் கொடுத்ததை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். கடைசியில் பிரதிவாதியான காதலன் சட்டச் செலவுகளையும் அந்தப் பெண்ணிடம் கொடுக்க சொல்லப்பட்டு கவலையில் வீடு திரும்பி இருக்கிறார் காதலி.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap