34.1 C
Dubai
September 27, 2020
UAE Tamil Web

சமூக ஊடகங்களில் முன்னாள் மனைவியை கேலி செய்த கணவருக்கு 20,000 திர்கம் அபராதம்..!

மூன்று மாதங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு கவிதையில் தனது முன்னாள் மனைவியை கேலி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிராக கீழ் நீதிமன்றம் உத்தரவிட்ட 20,000 திர்கம் அபராதத்தை அபுதாபி காசேஷன் (Cassation) நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

நீதிமன்ற பதிவுகளின்படி, பிரதிவாதி தனது முன்னாள் மனைவியை, ஒரு குரங்கை போல் ஒத்திருப்பதாக சித்தரித்து கேலி செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

“இறுதியாக, நான் நிம்மதியாக இருக்கிறேன்; இந்த குரங்கு நரகத்திற்கு செல்லட்டும்” என்றும் கேலி செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தனது முன்னாள் கணவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட கேலி கவிதை குறித்து கருத்து தெரிவித்த அந்த பெண், “அவமானப்படுத்தியும் அவதூறும்” செய்தார் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் “அவர் எனது வாட்ஸ்அப்பில் இந்த தவறான செய்திகளை எனக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்,” என்று அந்த பெண் கூறினார்.

விவாகரத்து செய்யப்பட்டதிலிருந்து, முன்னாள் கணவர் கடற்கரையில் எடுத்த தனது சில படங்களையும் வீடியோக்களையும் அனுப்பியுள்ளார் என்றும் அந்த பெண் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அபுதாபி குற்றவியல் நீதிமன்றம் அந்த நபருக்கு 20,000 திர்கம் அபராதம் செலுத்த உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, தீர்ப்பில் அதிருப்தி அடைந்த அவர், இந்த வழக்கை அபுதாபி காசேஷன் (Cassation) நீதிமன்றத்திற்கு கொண்டுச் சென்றார்.

இறுதியாக, அந்த நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தும் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

Source : Khaleej Times

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!