UAE Tamil Web

போலி பாஸ்போர்ட் மூலமாக வெளிநாட்டிற்குத் தப்பிக்க முயற்சித்த நபர் துபாய் விமான நிலையத்தில் கைது..!

Dubai Airports turns 60

போலியான பஸ்போர்ட் மூலமாக வெளிநாட்டிற்குத் தப்பிக்க முயற்சித்த பாலஸ்தீன் நாட்டைச் சேர்ந்த நபர் (33) மீதான வழக்கு இன்று துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஸ்பானிஷ் பாஸ்போர்ட் வைத்திருந்த அந்நபர், சந்தேகத்திற்கிடமாக நடந்துகொண்டதால், துபாய் விமான நிலைய அதிகாரிகள் அவரை சோதித்திருக்கிறார்கள். அப்போது, அவர் வைத்திருந்த பாஸ்போர்ட் போலி எனத் தெரியவந்திருக்கிறது.

ஸ்பானிஷ் ஐடி ஒன்றையும் அவர் வைத்திருந்திருக்கிறார். அதுவும் போலியானது என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். துருக்கியில் ஒருவரிடம் 8,800 திர்ஹம்ஸ் கொடுத்து, போலிப் பாஸ்போர்ட்டை வாங்கியதாக அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். அதில் புகைப்படம், என்ட்ரி, எக்ஸிட் ஆகிய அனைத்தையும் அவரே மாற்றியிருக்கிறார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 6 மாத சிறைத்தண்டனையும், தண்டனைக்காலம் முடிவடைந்தவுடன் அவர் நாடுகடத்தப்பட வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.