22.7 C
Dubai
October 23, 2020
UAE Tamil Web

இளைஞரிடம் பணத்தை திருடிக்கொண்டு, சரமாரி தாக்குதல் நடத்திய கும்பல்..!

crime

துபாய் நீதிமன்றத்தில் தாக்குதல் மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதற்காக ஒரு பெண்ணும் அவளது கூட்டாளியும் விசாரணைக்கு ஆஜர் படுத்தப்பட்டனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி, 22 வயதான நைஜீரிய விபச்சார பெண், கேமரூன் நாட்டைச் சேர்ந்த 23 வயதான இளைஞரை 80 திர்ஹம்ஸ்ற்கு உடலுறவிற்கு அழைத்ததாக பொது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த விபச்சார பெண் இளைஞரிடமிருந்த 2500 திர்ஹம்ஸை திருடியது மட்டுமில்லாமல் அவளது கூட்டாளியுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

துபாய் முதல் நிகழ்வு நீதிமன்றத்தில் அந்த பெண் மீது பாலியல் தொழில் செய்யததாகவும், அவரது விசா காலம் முடிந்தும் அதிக நாட்கள் நாட்டில் தங்கியதாகவும், பணத்தை இழந்தவருடன் சட்டவிரோதமாக உடலுறவு கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பணத்தை இழந்தவர் மீது சட்டவிரோதமாக ஒருமித்த உடலுறவு கொண்டது, விதி மீறல் மற்றும் அனுமதி இல்லாமல் மது அருந்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அல் முரக்காபாத் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டது.

இது குறித்து பணம் இழந்தவர் கூறும்போது, “சம்பவம் நடந்த நாளன்று, நான் பணிபுரிந்த ஆட்டோ பட்டறையிலிருந்து வேலை நிறுத்தம் செய்யப்பட்டேன். இதன்மூலம் 5,500 திர்ஹம்ஸ் நிலுவைத் தொகை பெற்றேன். நான் 2500 திர்ஹத்தை என் சட்டைப் பையிலும், மீதமுள்ளவற்றை நான் அணிந்திருந்த உள்ளாடையிலும் வைத்தேன்” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “அன்று இரவு 8 மணியளவில் நான் அபுஹெயிலில் ஒரு நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்த போது குற்றம் சாட்டப்பட்ட பெண்ணைக் கண்டேன். அவள் என்னை 80 திர்ஹம்ஸ்ற்க்கு உடலுறவு கொள்ள அவளது ப்ளாட்டிற்கு அழைத்தாள்” என்றார்.

அவர் தனது சட்டைப் பையில் வைத்திருந்த பணம் காணவில்லை என்பதை உணர்ந்து அந்த பெண்ணிடம் கேட்டபோது, அந்த பெண் தனக்கு அது எங்கே என்று தெரியவில்லை என்று சத்தமிட்டுள்ளார். அவளுடைய கூட்டாளி அவரை முகத்தில் குத்தியுள்ளார்.

உடனே பாதிக்கப்பட்டவரின் நண்பரும், அவருடைய நாட்டை சேர்ந்த மற்றொரு நபரும் அப்போது பிளாட்டுக்குள் நுழைந்தனர். பாதிக்கப்பட்டவரை சிக்கலில் இருந்து தப்பிக்க வைப்பதற்காக அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறும், பணத்தை விட்டு விடவும் வலியுறுத்தினர். ஆனால் அவர் காவல்துறையை அழைக்க வலியுறுத்தினார். பெண்ணுடன் சம்பந்தப்பட்ட மற்ற ஆண்கள், போலீசார் வரும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பாதிக்கப்பட்டவரின் நண்பர் 36 வயது, அரசு தரப்பு புலனாய்வாளரிடம் கூறும்போது, “அன்று இரவு நான் அவருடன் இருந்தேன். அவர் அந்தப் பெண்ணுடன் சென்ற அரை மணி நேரத்திற்குப் பிறகு அவர் அலறுவதைக் கேட்டேன். என்ன நடக்கிறது என்று பார்க்க நான் மேலே சென்றபோது, அவர் தாக்கப்படுவதைக் கண்டேன். அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து கொண்டேன். சிலர் என் நண்பர் அந்த இடத்திற்குள் நுழைந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசாரிடம் கூறினர். ஆனால் அது உண்மையல்ல” என்று தெரிவித்தார்.

அந்த பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறினாலும், அந்த இடத்திற்குள் பலவந்தமாக நுழைந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லாததால் அவரது கதை குறித்து சந்தேகம் இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

நீதிமன்றம் இவ்வழக்கின் தீர்ப்பை மார்ச் 10 ம் தேதி வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



error: Alert: Content is protected !!