அமீரக காவல் நிலையத்திற்கு 15 முறை தொலைபேசி அழைப்புகள் செய்ததற்காகவும், தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காகவும் ஒரு நபருக்கு புஜைரா நீதிமன்றம் 50 ஆயிரம் திர்ஹம்ஸ் அபராதம் விதித்துள்ளது.
ஒரு நபர், புஜைராவில் உள்ள அல் மதீனா காவல் நிலையத்திற்கு தொடர்புக் கொண்டு, “தனது உடைமைகள் தெரிந்தவரின் வீட்டில் இருப்பதாகவும் அதனை மீட்டெடுக்க போலீஸ் ரோந்து அதிகாரிகள் தேவை என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதனை அடுத்து பொருட்களை மீட்டெடுப்பதற்காக அவரிடம் இருந்து தகவல்களை போலிஸார் பெற்றுக் கொண்டனர்.
இருப்பினும் அந்த நபர் 15 முறை தொடர்ந்து காவல்துறைக்கு ஃபோன் செய்து போலிஸாரிடம் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தொந்தரவு செய்துள்ளார். அந்த நபரின் இடைவிடாத ஃபோன் கால் காரணமாக மற்றவர்களின் அழைப்புகளுக்கு பதிலளிப்பதில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அந்த நபர் கைது செய்யப்பட்டு போலிஸாரால் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். இடைவிடாது ஃபோன் செய்தவர் நல்ல நிலையில் இருப்பது போலிசாருக்கு தெரியவந்தது. மேலும் விசாரணையின் போது, தனது உடைமைகள் எடுக்க போலீஸ் ரோந்து அதிகாரிகள் தேவை என்ற காரணத்தால் தொடர்ந்து காவல்துறைக்கு தொடர்பு கொண்டதாக ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் காவல்துறைக்கு இடைவிடாது தொலைபேசி அழைப்புகள் செய்ததற்காகவும், போலிசாரிடம் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காகவும் அந்த நபருக்கு புஜைபுஜைரா நீதிமன்றம் 50 ஆயிரம் திர்ஹம்ஸ் அபராதம் விதித்தது.
