UAE Tamil Web

துபாய்: இந்தியப் பெண் மருத்துவ உதவியாளரை கன்னத்தில் அறைந்த ஏமிராட்டி ஆண் கைது..!

dubaicourt

இந்தியாவைச் சேர்ந்த பெண் மருத்துவ உதவியாளரை கன்னத்தில் அறைந்த ஏமிராட்டி ஆண் மீதான வழக்கு இன்று துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தனது தந்தை இறந்த வருத்தத்தில் இருந்த அந்த நபர் பணியில் அலட்சியம் காட்டியதாகக் கூறி மருத்துவ உதவியாளரைத் தாக்கியிருக்கிறார்.

கடந்த செப்டம்பரில் நாத் அல் ஷேபாவில் ஒருவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரை ரஷீத் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி துபாய் ஆம்புலன்ஸ் கார்ப்பரேஷனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, ரஷீத் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இதனிடையே அவர் உயிரிழந்திருக்கிறார். மருத்துவமனைப் பணியாளர் அலட்சியமாக நடந்துகொள்வதாக சகோதரி தன்னிடம் தெரிவித்ததாக குற்றவாளி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,”நான் எனது தந்தை இறந்த அதிர்ச்சியில் இருந்தேன். அப்போது எனது சகோதரி மருத்துவப் பணியாளர் அலட்சியமாக நடந்துகொள்வதாக தெரிவித்தார். எனது தந்தையை மருத்துவமனைக்கு மாற்றிய நபரிடம் சென்று அவரை அறைந்தேன்” என்றார்.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த இந்தத் தாக்குதலினால் 2 சதவீத நிரந்தர காதுப் பிரச்சினை அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது.

தனக்கு நேர்ந்த தாக்குதல் பற்றிப் பேசிய அந்தப் பெண்,” அன்று நான் பணியில் இருந்தேன். அவர் என்னிடம் வந்து நோயாளியை நீங்கள் தான் மாற்றினீர்களா எனக் கேட்டார். நாத் அல் ஷேபாவில் இருந்து வந்தவரா? எனக் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, அவர் என் முகத்தில் அறைந்துவிட்டார். அருகில் இருந்தவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர். எனது இடப்பக்க தலை கடுமையாக வலி எடுத்தது. எனது வாயில் இருந்து இரத்தம் வடிந்தது. எனக்கு இன்னும் காது கேட்பதில் பிரச்சினை இருக்கிறது” என்றார்.

உடல் ரீதியாக தாக்கி 2 சதவீத நிரந்த ஊனத்தை ஏற்படுத்தியவர் மீதான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே மாதம் 25 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dubaicourt
0 Shares
Share via
Copy link