ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக இணைய சேவை வழங்கியவருக்கு சிறைத்தண்டனை..!

Man jailed, fined Dh20,000 for illegally providing internet services in UAE

ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களுக்கு சட்டவிரோதமாக இணைய சேவைகளை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட வெளிநாட்டவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும், 20,000 திரகம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் உள்ள பெடரல் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, ஆசியாவை சேர்ந்தவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர் அவருக்கு தண்டனைகளை வழங்கியுள்ளது.

அந்த நபர் சட்டவிரோதமாக குடியிருப்பாளர்களின் வீடுகளில் இணைய இணைப்பை அமைத்து தந்ததாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து நீதிமன்றம் அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும், 20,000 திரகம் அபராதம் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

Source : Khaleej Times

 

Loading...