UAE Tamil Web

“சும்மா தானே இருக்க.. வீட்ட சுத்தம் செய்” என்ற உறவினருக்கு கத்திக்குத்து – துபாயில் பயங்கரம்..!

kitchen-knife-

தொடர்ந்து தன்னை அவமானப்படுத்தியதால் உறவினரை கத்தியால் குத்திய 40 வயது பாகிஸ்தான் நபர் மீதான வழக்கு இன்று துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையில் தன்னை அவமானப்படுத்தியதாகவும் ஓயாமல் வீட்டைச் சுத்தம் செய்ய நிர்பந்தித்ததாகவும் குற்றவாளி கூறியிருக்கிறார். ஒருநாள் கடுங்கோபத்தில் இருந்தபோது உறவினர் திட்டியதால் ஆத்திரம் தாங்காமல் கத்தியால் குத்தியதாக குற்றவாளி தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக துபாய் நீதிமன்றத்தின் முதல் நிகழ்வு குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பிறகு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்திருக்கிறது.

என்னதான் பிரச்சினை?

கடந்த 2019 ஆம் ஆண்டு ஹோர் அல் அன்ஸ் பகுதியில் இருந்து காவல்துறைக்கு ஒரு போன்கால் வந்திருக்கிறது. குடியிருப்பு பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு காவல்துறை சென்றபோது குற்றவாளி அடிபட்ட காலுடன் வீட்டிற்கு வெளியே கத்தியுடன் உட்கார்ந்திருக்கிறார். சம்பவத்தை பார்த்த அண்டை வீட்டார் ஒருவர், “திடீரென சப்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்தேன். அவர் (குற்றவாளி) அவரது உறவினரை கத்தியால் குத்திக்கொண்டிருந்தார். அதன்பிறகு காவல்துறைக்கு போன் செய்தேன்” என்றார்.

இறந்தவருக்கும் குற்றவாளிக்கும் இடையே நடந்த மோதலில் குற்றவாளிக்கு காலில் அடிபட்டிருக்கிறது. காவல்துறை விசாரணையின்போது குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

kitchen-knife-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap