UAE Tamil Web

துபாயில் ஏடிஎம்மில் பணம் எடுத்தவரிடம் பணத்தை திருடிய இந்தியர்..!

jail

துபாயில் சூப்பர் மார்கெட் ஒன்றிலுள்ள ஏடிஎம் (ATM) இல் பணம் எடுத்தவரின் கண்களில் பெப்பர் ஸ்ப்ரேயை அடித்து அவரிடமிருந்து 2500 திர்ஹம்ஸ் பணத்தை திருடிய இந்தியரால் பரபரப்பு ஏற்பட்டது.

40 வயதான நேபாளி ஒருவர் அல் குசைஸில் உள்ள ஏடிஎம் இல் பணத்தை எடுப்பதற்காக சென்றுள்ளார். இதை பார்த்த 28 வயதான வேலையில்லாத இந்தியர் ஒருவர் வேகமாக அவர் அருகில் சென்று அவர் கண்களில் பெப்பர் ஸ்ப்ரேயை அடித்து அவர் ஏடிஎம் யிலிருந்து வெளியே எடுத்த 2500 திர்ஹம்ஸ் பணத்தை திருடிவிட்டு ஓட்டம் பிடித்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நேபாளி கூறும்போது, “சூப்பர் மார்க்கெட்டில் உள்ள ஏடிஎம் இல் 2500 திர்ஹம்ஸ் பணத்தை எடுத்துக் கொண்டிருந்தேன், அப்பொழுது அங்கு வந்த நபர் ஒருவர் என் கண்களில் பெப்பர் ஸ்ப்ரேயை அடித்து என் கையிலிருந்த 2500 திர்ஹம்ஸ் பணத்தை திருடிவிட்டு ஓடினார். நான் அவரை துரத்தி சென்றேன். ஓடிய வேகத்தில் என்னிடம் திருடிய பணத்தில் 300 திர்ஹம்ஸ் பணத்தை தவறவிட்டு தப்பி ஓடினார். என்னால் திருடனை பிடிக்க முடியவில்லை” என்று கூறினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் குற்றவாளியை பிடித்து துபாய் முதல் நிகழ்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குற்றவாளி பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து பெப்பர் ஸ்ப்ரேயை பயன்படுத்தியது, 2500 திர்ஹம்ஸ் பணத்தை திருடியது போன்ற குற்றங்களுக்காக 2500 திர்ஹம்ஸ் அபராதமும், 6 மாத காலம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டதோடு, அவரை நாடு கடத்தவும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

jail
0 Shares
Share via
Copy link