காதலியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை அடித்து கொலை செய்து விட்டு பாத் டப்பில் நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடிய காதலனுக்கு துபாய் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கனடா நாட்டைச் சேர்ந்த நபர் பெண் ஒருவரை மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக இருவருக்கு இடையே மோதல் நீடித்து வந்துள்ளது. தனது காதலிக்கு ஜின் பிடித்திருப்பதாக அவரது நண்பர்கள் வட்டாரத்தில் காதலன் கூறியுள்ளார். காதலனுக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதிகளவில் போதையை உட்கொண்ட காதலன் ஆத்திரத்தில் காதலியை சரமாரியாக அடித்து கொலை செய்துவிட்டு பாத் டப்பில் உடலை வைத்துள்ளார்.

5 மணி நேரம் கழித்து ஆம்புலன்சை அழைத்து தனது காதலி தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியுள்ளார். அக்கம்பக்கத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்ததாகவும் பெண்ணை காதலன் சரமாரியாக அடித்து துன்புறுத்தும் சத்தம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காதலனை தீவிரமாக விசாரித்தபோது அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். தனது காதலிக்கு ஜின் பிடித்திருந்ததாகவும் அதனிடம் இருந்து அவளை மீட்கவே தான் போராடியதாகவும் அந்த காதலன் கூறியுள்ளார்.
பிரேத பரிசோதனையில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதியான நிலையில் காதலனை கைது செய்து துபாய் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கனடாவைச் சேர்ந்த காதலனுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது
