தனது படுக்கையில் தூங்கியதற்காக நண்பரை கொலை செய்த நபர்.!

IN PRISON

தனது படுக்கையில் தூங்கியதற்காக நண்பர் ஒருவரை கொலை செய்ததாக ஆசியாவை சேர்ந்த வேலையற்ற ஒரு நபருக்கு துபாய் கிரிமினல் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. இந்த துயரச்சம்பவம் துபாயில் உள்ள அல் குவ்ஸ் தொழிற்சாலை மண்டல (Al Quoz Industrial Zone) தங்குமிடத்தில் அரங்கேறியுள்ளது.

குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தண்டனைக்காலம் முடிந்த பின்னர் அவரது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட வேண்டும் என துபாய் கிரிமினல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அந்த நபர், தனது படுக்கையில் தூங்கியதற்காக தனது ரூம்மேட்டை அடித்ததாக ஒப்புக்கொண்டார். இருப்பினும், அவர் தனது நண்பரை எந்த நோக்கத்துடனும் கொலை செய்யவில்லை என்றும், மறுநாள் காலையில் எழுந்தபோதுதான் அவர் இறந்துவிட்டார் என்பதை உணர்ந்தார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக, TFT (THE FILIPINO TIMES) தகவல் அளித்துள்ளது.

இறந்தவரின் உடல் அறைக்கு வெளியே கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற தொழிலாளர்கள், துபாய் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைக்கண்ட கொலையாளி, தப்பி ஓடியுள்ளார். பின்னர் அவர் காவல்துறையின் தீவிர முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார் என Emarat Alyoum daily என்னும் அமீரக ஊடகம் தெரிவித்துள்ளது.

Loading...