UAE Tamil Web

பேஸ்புக்கை இதுக்கெல்லாமா யூஸ் பண்ணுவிங்க… – துபாய் காவல்துறை நடத்திய ரகசிய ஆப்பரேஷன்..!

Facebook

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு வகையான மக்களை ஒன்றிணைப்பது பேஸ்புக் தான். ப்ரியா ஸ்வீட்டி போன்ற பேக் ஐடி ஆசாமிகள் தவிர்த்து, உலகத்தோடு இணைந்து செயல்பட பேஸ்புக் நல்ல தளமாக அமைந்துவிட்டது. ஆயிரம் நல்லது இருப்பினும் அதனை ஆகாத காரியத்திற்கும் உபயோகிப்பதே மனிதனின் புத்தி.

அவற்றுள் ஒருவரைத்தான் துபாய் காவல்துறை கடந்த ஜூன் மாதத்தில் கைது செய்திருக்கிறது. பேஸ்புக் வழியாக போதை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகளை விற்பனை செய்திருக்கிறார் இந்த வித்தகர்.

இருப்பினும் இந்த சங்கதி எப்படியோ போலீஸ் காதுகளை எட்ட, ஆசாமி தங்கியிருந்த இடத்திற்கு அவசரமாகச் சென்றிருக்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். “போதைப் பொருட்களை ஒப்படையுங்கள்” என காவல்துறை சொன்னதும் அயர்ன் பாக்சை எடுத்து நீட்டியிருக்கிறார் அந்த பிரபல போதைப் பொருள் வியாபாரி.

குழப்பத்துடன் காவல்துறை அதிகாரிகள் பார்க்க, அயர்ன் பாக்ஸைப் பிரித்து உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிரிஸ்டலின் வஸ்துக்களை வெளியே எடுத்திருக்கிறார் குற்றவாளி. அதன்பின்னர் தான் அங்கிருந்தவர்களுக்கு தெரிந்திருக்கிறது, அது சூடாகும் அயர்ன் பாக்ஸ் அல்ல… ஆளையே சூடாக்கும் வித்தையை கொண்டது என்று.

மெசெஞ்சர் மூலமாக போதைப் பொருளை விற்பனை செய்துவந்த அந்த நபரை அலேக்காக ஜீப்பில் ஏற்றி கொண்டுசென்றது காவல்துறை. இப்போது அவர்மீதான வழக்கு நடைபெற்றுவருகிறது.

Facebook
1 Share
Share via
Copy link