UAE Tamil Web

விமான விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட இந்தியர் 45 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்தினருடன் இணைகிறார் – மனதைத் தொட்ட நெகிழ்ச்சி சம்பவம்!

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட சஜ்ஜத் தாங்கல் என்பவர் 1970களில் வேலை தேடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டு வந்துள்ளார். கிடைத்த வேலைகளை கவனத்திக் கொண்டே துபாய், அபுதாபியில் நடைபெற்று வந்த இந்திய கலாச்சார நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும் அவர் செய்து வந்தார். 1976ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் மலையாள சினிமாவின் பிரபல நடிகையான ராணி சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Malayalam actors who passed away in accidents
ராணி சந்திரா

நிகழ்ச்சியை முடித்த கையோடு ராணி சந்திரா மற்றும் குழுவினருடன் இணைந்து சஜ்ஜாத் தாயகம் திரும்ப, அபுதாபியில் இருந்து மும்பை வழியாக சென்னை செல்வதற்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அக்டோபர் 12, 1971ல் அபுதாபியில் இருந்து புறப்பட்ட விமானம் மும்பையை நெருங்கிக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட கோளாறால் அவசரமாக தரையிறங்க முயற்சித்து பெரும் விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் நடிகை ராணி சந்திரா அவரது குடும்பத்தினர் உள்பட விமானத்தில் பயணித்த 95 பேர் உயிரிழந்தனர்.

Indian Airlines Flight 171 - Wikipedia
விபத்துக்குள்ளான விமானம் (FILE)

நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் சஜ்ஜாத் காயங்களுடன் உயிர் தப்பினார். பிரபல நடிகை விமான விபத்தில் மரணமடைந்ததால் அவர் சென்று வந்த நிகழ்ச்சிக்கு தொடர்புடைய சஜ்ஜாத், தன் மீது கடுமையான விசாரணைகள் நடத்தப்படும் என அஞ்சி, தனது நிலை குறித்து குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்காமல் இருந்துவிட்டார். போதிய பணமும் இல்லாததால் மும்பையிலேயே பாஸ்போர்ட், விசா எடுக்க உதவி செய்தல் மற்றும் வெளிநாட்டிற்கு ஆள் அனுப்பும் வேலைகளை செய்து வந்தார். 2019ல் கடும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சஜ்ஜாத் SEAL  எனும் தன்னார்வ தொண்டு அமைப்பிடம் தஞ்சம் புகுந்தார்.

நன்மைகள் வீண்போகாது… என் மகன் இறந்திருக்க மாட்டான் என்றே எண்ணிக்கொண்டிருந்தோம்.. நம்ப முடியாத அளவுக்கு நம்பிக்கை வைத்தேன்..

SEAL அமைப்பினருடன் சஜ்ஜாத் (நடுவில்)
SEAL அமைப்பினருடன் சஜ்ஜாத் (நடுவில்)

உடல்நலம் தேறியதும் சஜ்ஜாத் தான் கடந்து வந்த பாதையை விவரிக்கவே, SEAL அமைப்பினரும் அவரது சொந்த ஊரான கொல்லம் மாவட்டத்தில் உள்ள சஸ்தம்கொட்டா எனும் கிராமத்தையும் அங்கு அவரது 91 வயதான தாயார் ஃபாத்திமா பீவி தனது பிள்ளைகளுடன் நலமாக வாழ்ந்து வருவதையும் கண்டுபிடித்தனர்.

சஜ்ஜாத் நலமுடன் இருப்பது குறித்து கேள்விப்பட்ட குடும்பத்தினர் நம்ப முடியாத ஆச்சரியத்தில் மூழ்கினர். விமான விபத்தில் பலியானோர் பட்டியலில் சஜ்ஜாத் பெயர் இல்லாததால் அவன் இறந்திருக்க மாட்டான் என நம்பிக்கை மேல் நம்பிக்கை வைத்து இத்தனை ஆண்டுகளாக காத்திருந்ததாக அவரது தாயார் கண்ணீர் மல்க கூறினார். சஜ்ஜாத்தின் தந்தை 2012ல் மரணமடைந்த நிலையில், அவர் செய்த நன்மைகளே தனது மகனை 45 ஆண்டுகளுக்குப் பிறகு தன் மகனை கண்டுபிடித்துக் கொடுத்திருப்பதாகவும் அவரது தாயார் நெகிழ்ந்து போனார்.

அப்புறம் என்ன..

45 ஆண்டுகளுகள் கழித்து தனது குடும்பத்தினரை சந்திக்க கேரளாவுக்கு பறக்கிறார் சஜ்ஜாத்………

5 Shares
Share via
Copy link