மனைவியின் கண்ணில் மிளகாய் தூளை வீசிய கணவன்.!

Korean red chili powder

தனது மனைவியின் கண்களில் மிளகாய் தூளை எறிந்ததற்காக ஷார்ஜா குற்ற நீதிமன்றத்தில் ஒரு அரபு மனிதர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் தனது மனைவியை தாக்கியதற்காகவும் மற்றும் துஷ்பிரயோகம் செய்ததற்காகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணையின்போது, ​​”தினசரி வேலைகளின் அதிக மன அழுத்தம் காரணமாக, சாதம் சமைக்கும் போது கவனத்தை இழந்து, உப்புக்கு பதிலாக சர்க்கரையை இட்டு சமைத்துள்ளேன். எனது கணவர் அதனை ருசிபார்த்து, “முட்டாள்” என்று என்னை கோபமாக சத்தம் போட ஆரம்பித்தார். அப்போது தான் நான் என்ன செய்துள்ளேன் என்பதை உணர்ந்தேன். மேலும் எனது கணவர், நான் அவருக்கு “புட் பாய்சன்” செய்ய முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டினார். அதுமட்டுமின்றி என்னை திருமணம் செய்து கொண்டதிலிருந்து, அவர் தனது வாழ்க்கையில் ஒருபோதும் மகிழ்ச்சியாக உணரவில்லை என்றும் கூச்சலிட்டார்” என்று அந்த பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஒரு “அற்பமான காரணத்திற்காக” அவர் தன்னை தவறாக பேசுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும், அவருடன் தங்கியிருந்தபோது “12 வருட துயரங்களைத் தாங்கிக் கொண்டேன்” என்றும் கணவரிடம் கூறியுள்ளார் அந்த பெண். இதைத் தொடர்ந்து, கோபமடைந்த அந்த கணவர், மனைவியின் முகத்தில் அறைந்து, சமையலறைக்குள் சென்று, மிளகாய் தூளுடன் உப்பு கலந்து அவர் கண்களில் எறிந்துள்ளார்.

எரிச்சல் தாங்க முடியாமல் தனது கண்களை பல முறை தண்ணீரில் தேய்த்து கழுவியுள்ளார் அந்த மனைவி. ஆனால் அது பயனற்று போகவே, பின்னர் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு அவரது கண்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரது கண்களில் ஒன்று சேதமடைந்துள்ளதாக மருத்துவ அறிக்கை அளித்தனர்.

தனது கணவர் தன் கண்களுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியதாகவும், அது தன்னை பார்வையற்றவராக மாற்றக்கூடும் என்றும் அந்த பெண் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Loading...